Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுஷ்மிதா சென்னின் தாலி!! வெப் தொடரின் டீசர் வெளியீடு!! 

sushmita-sens-thali-web-series-teaser-release

sushmita-sens-thali-web-series-teaser-release

சுஷ்மிதா சென்னின் தாலி!! வெப் தொடரின் டீசர் வெளியீடு!! 

நடிகை சுஷ்மிதா சென் தான் நடித்த தாலி வெப் தொடரின் டீசரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

சுஷ்மிதா சென் பாலிவுட் இன் பிரபலமான நடிகை ஆவார். 1994 -ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற சுஷ்மிதா சென் தமிழில் நாகார்ஜுன் ஜோடியாக ரட்சகன் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு பல்வேறு இந்தி படங்களில் நடித்த இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

இதுவரை திருமணமே செய்யாத சுஷ்மிதா சென்னுக்கு 47 வயதாகிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் பிரபல மாடலுடன் உறவில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டார். கடந்த ஆண்டு இருவரும் பிரிந்ததை தொடர்ந்து தத்தெடுத்த தனது இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். இதன் காரணமாக திரைப்படம் நடிப்பதில் இருந்து விலகிய இவர் சில வெப் தொடர்களில் மட்டும் நடித்து வருகிறார்.

தற்போது சுஷ்மிதா சென் திருநங்கையாக தாலி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். மும்பையில் வசித்து வரும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்கு குரல் கொடுக்கும் ஸ்ரீ கௌரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. ரவிஜாதவ் என்ற தேசிய விருது பெற்ற இயக்குனர் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இதன் டீசரை சுஷ்மிதாசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த டீசர் சுஷ்மிதாவின் குரலுடன் தொடங்குகிறது. கண்ணாடி முன் தனது சேலையை சரி செய்து கொண்டு ஸ்ரீ கௌரி சாவந்த் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிகழ்வுடன் இந்த தொடர் தொடங்குகிறது.

See this Instagram video by @sushmitasen47 https://www.instagram.com/reel/CvRXLl-Nia-/?utm_source=ig_web_button_share_sheet

Exit mobile version