உலக நாடுகளுக்கு ரொம்ப சீக்கிரமே ஒரு குட் நியூஸ்! டிரம்ப்பின் சஸ்பென்ஸ்?

0
184

அமெரிக்காவில் கொரோனாவால் 34 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றின் எண்ணிக்கை இன்று வரை குறைந்தபாடில்லை.நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அமெரிக்காவைப் பொறுத்தவரையில்1,37,000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி இந்த ஒரு வாரமாக நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா விவகாரத்தில் விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவிட போகின்றோம் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை விட அமெரிக்காவில் தான் உலகின் மிகப்பெரிய கொரோனா  சோதனை திட்டம் உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில் அமெரிக்காவின் சோதனை திட்டம் விரிவானவை.
இதுவரை 4.5 கோடிக்கு மேல் சோதனைகள் நடத்தி இருக்கிறோம். சிறந்த  தடுப்பூசிகளை  உருவாக்கி, சிறப்பான சிகிச்சைகளை விரைவில் அளிக்க இருக்கிறோம். மேலும் இந்த விஷயத்தில் மிக விரைவில் உங்களுக்கு எல்லாம் நல்ல தகவல்கள் வர உள்ளன என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.