Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தென்காசி விவசாயின் மரணத்தில் சந்தேகம்: ?  உயர் நீதிமன்ற விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்?

விவசாயி முத்து மரணம் குறித்து சந்தேகமும் குழப்பமும் இருப்பதால் இதுகுறித்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து தம்முடைய தோட்டத்தில் நிலக்கடலை மற்றும் காய்கறிகள் பயிரிட்டு இருந்தார்.அதனை பாதுகாக்கும் வகையில் தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார்.ஏனெனில் தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தான் விவசாயம் நடைபெற்று வருகிறது.அங்கேயும் காட்டுப்பன்றி போன்ற இன விலங்குகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவது வழக்கமாக இருக்கும்.வன விலங்குகளால் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு பேரிடர் இழப்பாக கருதி நிவாரணம் வழங்க கோரி விவசாயிகளும் சில கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

இத்தகைய சூழ்நிலையில் விவசாய அணைக்கரை முத்து தமது பயிர்களை காக்கும் நோக்கத்தில் மின்வேலி அமைத்துள்ளார்.எந்தவித அனுமதியும் இன்றி விண்வெளி அமைத்ததாக கடந்த 22ஆம் தேதி நள்ளிரவு சிவசைலம் வனச்சரக அலுவலகத்திற்கு விவசாய முத்துவை அழைத்து சென்றதாகவும் அங்கு வனத்துறை அதிகாரிகளும் மற்றும் சில ஊழியர்களும் விவசாய முத்துவை அடித்து துன்புறுத்தியதாகவும் இதனால் படுகாயமடைந்த முத்துவை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அங்கு மருத்துவ வசதி போதுமானதாக இல்லாததால் கூடுதல் மருத்துவ உதவிக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு சென்றதாகவும் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 75 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த விவசாயி வனத்துறையினர் கடுமையாக தாக்கியதிற்கு என்ன காரணம்?மருத்துவ சிகிச்சைக்காக புதுவை அழைத்துச் செல்லும்போது என் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை?வனத்துறை தாக்கியதில் விளைவாகவே விவசாயி இருந்திருக்கக்கூடும் என்பதை சந்தர்ப்ப சாட்சியங்கள் மூலம் தெரியவருகிறது எனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு வனத்துறையின் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.மேலும் முத்துவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யும்போது வீடியோ எடுத்து விட வேண்டும்.இந்த வழக்கினை பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் இதுமட்டுமன்றி முத்துவின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Exit mobile version