சளி,இருமல் போன்றே தொண்டை அடைப்பும் கடுமையான தொந்தரவாக உள்ளது.இந்த தொண்டை அடைப்பை சரி செய்ய கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்.
1)கல் உப்பு
2)தண்ணீர்
ஒரு பாத்திரத்தில் 100 முதல் 150 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடத்திற்கு சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி கல் உப்பு கலந்து தொண்டையில் படும் படி வாயை நன்றாக கொப்பளித்து வந்தால் தொண்டை அடைப்பு சரியாகும்.
1)பசும் பால்
2)மஞ்சள் பொடி
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் சேர்த்து காய்ச்சுங்கள்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் பொடி கலந்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் தொண்டை அடைப்பு குணமாகும்.
1)இஞ்சி
2)தேன்
3)எலுமிச்சை
சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு பாதி எலுமிச்சம் பழச் சாறை இடித்த இஞ்சி சாறில் பிழிந்து கொள்ளுங்கள்.
இதையடுத்து ஒரு தேக்கரண்டி தேனை இஞ்சி சாறில் கலந்து காலை மாலை பருகி வந்தால் தொண்டை அடைப்பு நீங்கும்.
1)பூண்டு
2)தேன்
3)மிளகு
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு பல் பூண்டை தோல் நீக்கி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் இரண்டு மிளகை தட்டி போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.பிறகு இதை வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் தொண்டை அடைப்பு குணமாகும்.
1)பட்டை
2)தேன்
ஒரு துண்டு பட்டையை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் தொண்டை அடைப்பிற்கு தீர்வு கிடைக்கும்.