Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!! தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

முன் தொண்டை பகுதியில் பட்டாம் பூச்சி போன்ற அமைப்பில் தைராய்டு சுரப்பி இருக்கின்றது.இவை ஆண்,பெண் அனைவருக்கும் இருக்கும்.இந்த தைராய்டு சுரப்பி அதிகமான தைராய்டு ஹார்மோன்களை சுரந்தால் ஹைப்பர் தைராய்டிசம் பாதிப்பு ஏற்படும்.அதுவே இந்த தைராய்டு சுரப்பி குறைவான தைராய்டு ஹார்மோன்களை சுரந்தால் ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு ஏற்படும்.

இதில் ஹைப்பர் தைராய்டிசம் பாதிப்பு ஏற்பட்டால் என்ன மாதிரியான அறிகுறிகள் மற்றும் இவை எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளது.

ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள்:

1)வியர்த்தல்
2)உடல் எடை இழப்பு
3)சீரற்ற இதயத் துடிப்பு
4)தசை வலிமை இழத்தல்
5)கை நடுக்கம் ஏற்படுதல்
6)தூக்கமின்மை பிரச்சனை
7)பதட்டம்

ஹைப்பர் தைராய்டு பாதிப்பிற்கான காரணங்கள்:

1)தைராய்டு சுரப்பி அதிகமாக சுரத்தல்
2)அதிக அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்
3)கிரேவ்ஸ் பாதிப்பு

ஹைப்பர் தைராய்டு பாதிப்பை குணப்படுத்தும் சிகிச்சை முறைகள்:

**தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பை கட்டுப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் தைராய்டு பாதிப்பில் இருந்து இருந்து மீள முடியும்.

**கதிரியக்க சிகிச்சை மூலம் ஹைப்பர் தைராய்டு பாதிப்பில் இருந்து மீள முடியும்.

**தைராய்டு சுரப்பியை அகற்றுவதன் மூலம் ஹைப்பர் தைராய்டு பாதிப்பை சரி செய்து கொள்ள முடியும்.

தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1.உணவில் அதிக அயோடின் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.அயோடின் நிறைந்த உணவுகள் தைராய்டு சுரப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.

2.காஃபின் நிறைந்த பானங்கள் மற்றும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.இவை ஹைப்பர் தைராய்டு பாதிப்பை அதிகரித்துவிடும்.

ஹைப்பர் தைராய்டு பாதிப்பில் இருந்து மீள உட்கொள்ள வேண்டிய உணவுகள்:

சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை,ஆரஞ்சு,சாத்துக்குடி போன்ற பழங்களை உட்கொள்ளலாம்.ஆப்பிள்,பேரிக்காய் போன்ற பழங்களை சாப்பிடுவதால் தைராய்டு பாதிப்பு கட்டுப்படும்.

கொத்தமல்லி விதை ஊறவைத்த பானத்தை பருகுவதன் மூலம் தைராய்டு பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.

Exit mobile version