Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதனால்தான் டைபாய்டு காய்ச்சல் வருகின்றது:? அவசியமாக தெரிந்துகொள்ளுங்கள்! வருமுன் காப்போம்!

டைபாய்டு காய்ச்சல் வருவதற்கான காரணம்?

டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைசி என்ற ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று ஆகும்.இந்த பாக்டீரியாவானது வெளியிலிருந்து எங்கும் பரவுவதில்லை.நாமாகவே நம் கையால் பாக்டீரியாவை எடுத்து உடலுக்குள் செலுத்தி கொள்வதனால் தான் வருகின்றது.

அதாவது அசுத்தமான நீரை பயன்படுத்துவது,சுத்தமற்ற உணவுகளை உண்பது கைகளை கழுவாமல் சாப்பிடுவது போன்றவற்றினால் அதிலும் குறிப்பாக நீரினால் பரவக்கூடிய ஒரு பாக்டீரியா ஆகும்.

ஆண்டுதோறும் உலகளவில் இந்த பாக்டீரியாவில் 21.5 லட்சம் பேர் பாதிப்படைகின்றனர்.இந்த டைபாய்டு காய்ச்சலை நாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் எலும்பு மஞ்ஜைகளில் பரவி உணவு பாதையில் ஓட்டை ஏற்பட்டு இறக்ககூட நேரிடும்.

இந்த காய்ச்சல் வருவதற்கான முக்கிய அறிகுறிகள்?

அதிக காய்ச்சல் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.

இந்த காய்ச்சலை நாம் சிறுநீர் மாதிரிகள் மற்றும் ரத்த சோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

முதல் இரண்டு வாரங்களுக்கு பிறகு தான் இந்த பாக்டீரியா தொற்றின் அறிகுறியே நமக்கு தெரியவரும்.

இது குணமடைய ஒரு மாதங்களுக்கு மேலே ஆகும்.

* 104 ஃபேரன் டிகிரி வரை காய்ச்சல் ஏற்படும்

* அதீத உடல் சோர்வு ஏற்படும்

* பசியின்மை,நீங்கள் சாப்பிட நினைத்தாலும் சாப்பிட முடியாத அளவிற்கு பசியின்மை ஏற்படும்.

*சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்.

* நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சிகிச்சை முறை?

மருத்துவர்கள் இந்த பாக்டீரியாவிற்கான தடுப்பு மருந்துகள் உட்செலுத்திய பிறகு ஓரிரு நாட்களிலேயே நமது உடலில் முன்னேற்றம் தெரியும்.ஒரு வாரத்திலேயே உடல் சரியானது போன்ற நிலை தெரியும்.ஆனால் இந்த பாக்டீரியாவின் தாக்கம் ஒரு மாதம் வரை நம் உடலினுள் இருக்கும்.இதனால் மருத்துவர்கள் கூறுகின்ற மருந்து மாத்திரைகளை நாம் முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.காய்ச்சல் சரியாகிவிட்டது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்ளாமல் இருக்கக் கூடாது.

Exit mobile version