Syria is a civil war: ரஷ்யா நாட்டிற்கு தப்பி சென்றது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்.
சிரியா நாட்டில் கடந்த 2000 ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக கிளர்ச்சியார்கள் குழுவாக ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பு தொடர் தாக்குதலை நடத்தி வந்தது. இதற்கு அபு முகமது அல் கோலானி என்பவர் தலைமை வகித்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த போரில் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்-க்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் போரில் களம் இறங்கியது.
அதன் பிறகு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் அதிபர் பஷர் அல் அசாத். மீண்டும் அந்த நாட்டில் உள் நாட்டுப் போர் ஏற்பட்டு வருகிறது. கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு அமெரிக்கா நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு போரில் உதவிகளை செய்து வருவதால் சிரியா ராணுவம் அவர்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
நாட்டின் முக்கியமான பகுதிகளை கைப்பற்றினார்கள் கிளர்ச்சியாளர்கள். சமீபத்தில் தலைநகரம் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றினார்கள் அப்போது அதிபர் பஷர் அல் அசாத் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ரஷ்யா நாட்டிற்கு தப்பி சென்றார். தான் ரஷ்யா நாட்டிற்கு தப்பி சென்றது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நான் அதிபர் பதவியில் இருந்து விலக விரும்பவில்லை . ரஷ்யா நாட்டிற்கும் தப்பி செல்ல விரும்ப விலை என்ற மன நிலையில் இருந்தேன். கடந்த 8 ஆம் தேதி ரஷ்ய நாட்டின் ராணுவ தளத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தினார்கள். அப்போது ராணுவம் தனது பாதுகாப்பு காரணமாக ரஷ்யா நாட்டிற்கு தன்னை அழைத்து சென்று விட்டார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.