டி.ஆர்.பாலுவை கண்டு கொள்ளாத கனிமொழி! மக்களவையில் அரங்கேறிய அதிகார மோதல்

0
132
T R Balu vs Kanimozhi in Loksabha-News4 Tamil Latest Online Tamil News

டி.ஆர்.பாலுவை கண்டு கொள்ளாத கனிமொழி! மக்களவையில் அரங்கேறிய அதிகார மோதல்

மத்தியில் ஆட்சியிலிருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் இந்த சட்ட திருத்தத்திற்கு ஆதரவும்,எதிர்ப்பும் ஒருசேர எழுந்து வண்ணமே உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இந்தியாவில் தயாரிக்கும் முறையை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி கொண்டு வந்த ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இதை அப்படியே மாற்றி, தற்போது ரேப் இன் இந்தியாவாக தான் உள்ளதாக முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதற்கு எதிராக பாஜக எம்பிக்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டத்தால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக கூறி இதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி ராகுல்காந்தி பேசிய இந்த சர்ச்சை பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார். இதனையடுத்து கனிமொழி, சரத்பவார் மகள் சுக்ரியா சுலே தவிர மீதியிருக்கும் மொத்த பெண் எம்பிக்கள் அனைவரும் எதிர் தரப்பில் இருந்து இதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூச்சலிட்டனர்.

மேலும் அப்போது பேசிய ஸ்மிருதி இராணி ஒட்டு மொத்த இந்திய பெண்களையும் ராகுல் காந்தி இதன் மூலமாக அவமானபடுத்தி விட்டதாகவும் நாட்டில் உள்ள பெண்கள் கற்பழிக்க படுவதை ராகுல் காந்தி வரவேற்கிறாரா என்றும் ஆக்ரோஷமாக பேசினார்.

மேலும் இதனை பற்றி ஒவ்வொரு பெண்களும் 40 வார்த்தைகள் பேச வேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து கனிமொழி இது குறித்து அவருடைய கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் ஸ்ம்ரிதி இராணி அழைத்தார். அதற்காக கனிமொழி பேச ஆரம்பிக்கும் போது தொடர்ந்து பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டதால் அவர் தன்னுடைய பேச்சை தொடர முடியாமல் தடுமாறி கொண்டிருந்தார்.

இந்நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு என்ன நினைத்தாரோ தெரியவில்லை வேகமாக கனிமொழியிடம் தமிழில் உட்காரும்மா என்று கூறினார். ஆனால் இதை கண்டுகொள்ளாத கனிமொழியோ இருங்க என் பெயரை குறிப்பிட்டு தானே கூப்பிடுகிறார்கள் என்று கட்டளையிடும் குரலில் தமிழில் கூறிவிட்டு பேச்சை தொடர்ந்தார். அதனை தொடர்ந்து கனிமொழி ராகுல் கருத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்தார்.

இந்நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவர்களின் கட்டளைக்கு பணியாத கனிமொழியின் செயலை அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி கடும் வைரலாகி வருகிறது. எவ்வளவு பெரிய மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் திமுகவில் குடும்ப உறுப்பினர்களுக்கு தான் முன்னுரிமை என்றும் இந்த சம்பவம் குறித்து சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இன்னும் வேறு சிலரோ நாடாளுமன்ற திமுக குழு தலைவராக கனிமொழி வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில் டி ஆர் பாலுவை ஸ்டாலின் நியமித்தது கனிமொழிக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது அது தான் நேற்று வெளிப்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கான வீடியோ ஆதாரம் கீழே:

https://youtu.be/ZIUGmkwD7l0