Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இத்துறையையும் கவனியுங்கள்! முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த சேரன் ! நிறைவேற்றப்படுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் அன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதைப் பார்த்த சேரன் முக ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நிறைவேற்றப்படுமா என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

நேற்று மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்பொழுது பல திட்டங்களை முதல்வர் அவர்கள் அறிவித்தார். அதில் ஆண்டுதோறும் மூன்று இலக்கிய மாமணி விருது எழுத்தாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படும் என்று கூறினார். தென் சென்னையில் உயர் சிறப்பு மிகுந்த மருத்துவமனையை திறக்கப்படும், மதுரையில் கலைஞர் நூலகம் திறக்கப்படும், திருவாரூர் மாவட்டத்தில் சேமிப்புக் கிடங்குகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் இலவச பயண அனுமதி என திட்டங்களை அறிவித்தார்.

பின் மேலும் உயரிய விருதுகள் வென்ற தமிழ்நாட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் மாவட்டம் அல்லது அவர்கள் விரும்பும் அவ்விடத்திலேயே வீடு வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.

அந்த அறிவிப்பை பார்த்த நடிகர் சேரன் ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் அதற்கு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் சேரன் கூறியதாவது, மாநில விருது தேசிய விருதைப் பெற்ற இயக்குனர்கள் திரை எழுத்தாளர்கள் நிறைய பேர் தங்கள் வாழ்வியல் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். எல்லா துறைகளிலும் சிறந்தவர்களை கவனிக்கும் தாங்கள் இத் துறையின் முன்னோடி களையும் கௌரவிக்க வேண்டும் என்பதுதான் தாழ்மையான வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.

திட்டங்கள் அனைத்தும் சிறப்பு சார் எழுத்தாளர்களை கௌரவிப்பது பாராட்டுக்குரியது தான். அதேபோல திரைத்துறையிலும் மக்களுக்கு அணை சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்த எத்தனையோ இயக்குனர் மற்றும் பிற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் வியாபாரச் சந்தையில் புறந்தள்ள படுகிறார்கள். இல்லை படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அதையும் கவனத்தில் கொண்டு பாருங்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு ரசிகர்கள் அருமையான வேண்டுகோள் உங்களது வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர். இதை முதல்வர் அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.


https://twitter.com/directorcheran/status/1400636558240219136?s=20

Exit mobile version