Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சருமத்தை மெருகேற்ற வெறும் 2 நிமிடத்தை ஒதுக்குங்கள்!! சித்தா டாக்டர் சொன்ன அற்புத டிப்ஸ்!!

ஆண்களோ பெண்களோ யாராக இருப்பினும் தங்கள் முகத்தை இளமையாக காட்டிக் கொள்ள போராடி வருகின்றனர்.சிலர் மேக்கப் போட்டு வயதான தோற்றத்தை மறைக்கின்றனர்.இது வெறும் தற்காலிக தீர்வாக தான் இருக்கும்.உங்கள் முகம் 50 வயதை கடந்த பிறகும் சுருக்கம்,வறட்சி இன்றி இளமையாக இருக்க ஆரோக்கிய உணவுகள் மற்றும் இயற்கை பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் சருமம் மிருதுவாகவும் பொலிவாகவும் இருக்கும்.தினம் ஒரு பழத்தை அரைத்து குடித்து வந்தால் சருமம் பொலிவாக மாறும்.இது தவிர கற்றாழை பேஸ் பேக் போட்டு வந்தால் முகத்தில் உள்ள பருக்கள்,கரும் புள்ளிகள்,சுருக்கங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

கற்றாழையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இவை உடலில் இருக்கின்ற பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.இந்த கற்றாழையை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் இயற்கையாக சருமத்தில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.

கற்றாழை பயன்படுத்தும் முறை:

பிரஸ்ஸான கற்றாழை மடல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதன் முட்கள் மற்றும் மேல் தோலை நீக்கிவிடுங்கள்.

பிறகு கற்றாழை ஜெல்லை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி ஏழு அல்லது எட்டு முறை அலசி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் இந்த கற்றாழை துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கற்றாழை பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்கள் வரை காய வைக்க வேண்டும்.

அதன் பின்னர் குளிர்ந்த நீர் பயன்படுத்தி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.இந்த கற்றாழை ஜெல்லை உடல் முழுவதும் பயன்படுத்தலாம்.இப்படி தினமும் செய்து வந்தால் சருமத்திற்கு ஒரு பளபளப்பு கிடைத்துவிடும்.டல்லடிக்கும் முகம் விரைவில் பிரகாசமாக தெரிய ஆரம்பிக்கும்.

Exit mobile version