Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சினிமா பாணியில் கண்ணை மூடிக் கொண்டு இருந்தபோது நடிகைக்கு தாலி கட்டிய நபர்! கதறும் சீரியல்நடிகை!

சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்ற பைரவி காவல்துறையில் வழங்கிய புகாரில் தான் கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், வேலூரை சேர்ந்த ராஜா தேசிங்கு என்ற சுப்பிரமணி தயாரிப்பாளர் என்று தன்னிடம் அறிமுகமானார் என்றும், அவர் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சின்னத்திரையில் நடிப்பதற்கு சில வாய்ப்புகள் வந்தது நடிகையாகிவிட்டால் இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்பதால் தயாரிப்பாளராக ஆக்குகிறேன் என்று ராஜாதேசிங்கு தெரிவித்தார் என குறிப்பிட்டிருக்கிறார் பைரவி.

இந்த நிலையில், மயிலாடுதுறைக்கு சினிமா தயாரிப்பு குறித்து அழைத்துச்சென்ற ராஜாதேசிங்கு அங்கிருந்த கோவிலில் கட்டாய தாலி கட்டினார் என்றும், அந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றாலும் கூட என்னை வற்புறுத்தி கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு தற்சமயம் என்னையும், என்னுடைய பெண் குழந்தையையும், பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துகிறார். என்னை போல பல பெண்களையும் அவரை ஏமாற்றியிருக்கிறார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரினடிப்படையில் அவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைதானவர் என்று குறிப்பிட்டிருக்கிறார் பைரவி.

ஆகவே அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நடிகை வழங்கிய புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் டிஜிபி அலுவலகத்திற்கு வந்த நடிகை பைரவி தன்னுடைய கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதனைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் சரியான சமயத்தில் பைரவி மீது தண்ணீரை ஊற்றி அவர் தீ குளிப்பதை தடுத்தார்கள். இதனை தொடர்ந்து மெரினா காவல் நிலைய காவல் துறையைச் சார்ந்தவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version