பெண்கள் வேலைக்கு அமர்த்த கூடாது!! மீறினால் நிறுவனங்கள்  மூடப்படும்!!

Photo of author

By Sakthi

Afghanistan: பெண்கள் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தலிபான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லிம் கொள்கைகளை கடுமையாக கடைப்  பிடிக்கும் அமைப்பினர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் இந்த அமைப்பினரே ஆட்சி செய்து வந்தார்கள். அமெரிக்கா ராணுவம் தலிபான்களுடன் போர் புரிந்து அன் நாட்டில் மக்களாட்சி நிறுவியது. இருந்த போதிலும் தலிபான்களுக்கும் அமெரிக்க ராணுவத்துக்கு போர் என்பது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறினார்கள். இந்த நிலையில்  தலிபான் அமைப்பினருக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் உள்நாட்டு போர் தொடங்கப்பட்டது. இந்த போரில் ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு கைப்பற்றினார்கள் தலிபான்கள். ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற போகிறது என்பதை அறிந்த உடன் பல மக்கள் அமெரிக்க போர் விமானங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்து இருக்கும் காணொளிகள் இணையத்தில் அந்த சமயம்  வைரலானது.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போது பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என அறிவித்தார்கள். தலிபான்கள் இஸ்லாமிய பிற்போக்கு தனமான மத கட்டுப்பாடுகளை கடுமையாக்க கடைபிடித்து வருபவர்கள். குறிப்பாக பெண்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். பெண் குழந்தைகள் உயர்கல்வி பயில கூடாது, தனியாக சமூக வெளியில் நடமாட கூடாது. கால் பாதம் முதல் தலை வரையிலும் முழுமையாக மறைக்க  கூடிய ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

ஆண், பெண் என தனித்தனியாக விமானங்களில் செல்ல வேண்டும். பாடல் பாடுவதற்கு தடை என கடுமையான சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில் பெண்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்  என்ற கட்டுப்பாட்டை தலிபான் பொருளாதாரத் துறை அறிவித்து இருக்கிறது.

Exit mobile version