ஒசாமா பின்லேடன் பற்றி தாலிபான்கள் வெளியிட்ட செய்தி! அமெரிக்கா அதிர்ச்சி!

0
141
Talibans about osamaa bin laden and twin tower attack

ஒசாமா பின்லேடன் பற்றி தாலிபான்கள் வெளியிட்ட செய்தி! அமெரிக்கா அதிர்ச்சி!

தாலிபான் அமைப்பு சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியது.இந்த ஆக்கிரமிப்பை தாலிபான்கள் திட்டமிட்டு செய்தனர்.தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்தவுடன் அமெரிக்க ராணுவம் அங்கிருந்து வெளியேறியது.மேலும் ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பலரும் அந்த நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி முன்கூட்டியே நாட்டை விட்டு வெளியேறி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் குடும்பத்துடன் இருக்கிறார்.இந்நிலையில் ஆகஸ்ட் 31க்குள் அமெரிக்க படைகள் முழுவதும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் ஆகஸ்ட் 31க்கு பிறகு நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவித்திருந்தது.

மேலும் பல அறிவிப்புகளை தாலிபான்கள் அறிவித்துக்கொண்டே இருக்கின்றனர்.காபூல் விம்மான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலையே காணப்படுகிறது.வெளிநாட்டு மக்களை மீட்பதற்கு அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டின் விமானத்தை அனுப்பி மீட்டுக்கொள்கின்றனர்.மேலும் அந்த நாட்டின் பெண்களும் குழந்தைகளும் தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் தாலிபான் அமைப்பு மறைந்த ஒசாமா பின்லேடன் பற்றிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தான் மீது போர் புரிய இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதாகவும் தாலிபான் அமைப்பு செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.இந்த தகவலால் அமெரிக்கா கடும் கோபத்துக்கு உள்ளாகியுள்ளது.நடந்த சம்பவங்களை அப்படியே மாற்றிக் கூறி வருகின்றனர் தாலிபான்கள் எனவும் வரலாற்று அறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்கும் இது இன்னும் பகையையே உருவாக்கும்.