Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடல்களை வெட்டி என்ன செய்தார்கள் தெரியுமா? தாலிபான்களின் வெறிச்செயல்!

உடல்களை வெட்டி என்ன செய்தார்கள் தெரியுமா? தாலிபான்களின் வெறிச்செயல்!

33 வயதான கதேரா கஜினி நகரில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது தலிபான் பயங்கரவாதிகளால் சூழப்பட்டார்.ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் தாலிபான்களால் பல முறை சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அந்த பெண்ணின் உடலை வெட்டி நாய்களுக்கு சாப்பிடக் கொடுத்தனர் என்று கூறினார்.

தாலிபான் தீவிரவாதிகள் தனது அடையாள அட்டையை சரிபார்த்த பிறகு துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததாக கதேரா கூறினார்.கதேரா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது தலிபான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார்.சில நேரங்களில் எங்கள் உடல்கள் நாய்களுக்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன.

நான் அதிலிருந்து தப்பித்தது அதிர்ஷ்டம். தாலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானில் பெண்கள்,குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு என்ன நேர்ந்தது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.தாலிபான்களின் பார்வையில் பெண்கள் வாழவில்லை,மனிதர்களாக நடத்தப்படவில்லை.சதைகளாக மட்டுமே அவர்கள் எங்கள் உடம்பைப் பார்த்தனர்.கதேரா காபூலை விட்டு டெல்லிக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.அங்கு அவர் இப்போது கணவன் மற்றும் குழந்தையுடன் வசிக்கிறார்.

தாலிபான்கள் பெண்களை ஆண் மருத்துவர்கள் சந்திக்க அனுமதிக்கவில்லை.அதே நேரத்தில் பெண்களை படிக்கவும் வேலை செய்யவும் விடவில்லை.அதனால் ஒரு பெண்ணுக்கு என்ன வளர்ச்சி இருக்கப் போகிறது.இறப்பதைத் தவிர பெண்களுக்கு என்ன இருக்கிறது என்று அவர் கூறினார்.எங்களுடைய பெண்களும் இளைஞர்களும் இந்த 20 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை அடைந்து விட்டார்கள்.ஒரு நிலையான வாழ்வாதாரத்தைக் கண்டுபிடித்தும் முறையான கல்வியைப் பெற்றும் வந்துள்ளனர்.பெண்கள் பல்கலைக்கழகங்களில் நிறைந்து காணப்பட்டனர்.

பெண்கள் பள்ளிக்குச் செல்வதைப் பார்ப்பது ஒரு அழகான காட்சியாக இருந்தது.அனைத்தும் ஒரு வாரத்தில் தடைப்பட்டுவிட்டது.தாலிபான்களிடமிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக அவர்களின் கல்விச் சான்றிதழ்களை குடும்பங்கள் எரிக்கத் தொடங்கியுள்ளன என்று என் உறவினர்களிடமிருந்து நான் கேள்விப்பட்டேன் என்று கதேரா கவலையுடன் தெரிவிக்கிறார்.

Exit mobile version