தாலிபான்கள் முக்கிய அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் பதற்றம்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கடந்த சில நாட்களாக போர் நடத்தி வருகின்றனர்.ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இவர்கள் சில நாட்களிலேயே பெரும்பகுதியை கைப்பற்றி ஆப்கானிஸ்தானை அதிர்ச்சி அடையச் செய்துள்ளனர்.இதனிடையே ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி பதற்றத்தின் காரணமாக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.வெளிநாட்டு தூதரகங்களும் போர் காரணமாக மூடி விட்டனர்.ஒரு சில நாட்டு தூதரகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.மேலும் அமெரிக்கா தனது நாட்டு தூதரக அதிகாரிகளை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வந்துள்ளது. இதனிடையே காபூல் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.மேலும் பல்வேறு மக்கள் வெளிநாடு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் கூடியுள்ளனர்.
பல மக்கள் இந்தியாவிற்கு காபூல்-டெல்லி விமானத்தில் வந்து இறங்கியுள்ளனர்.இந்நிலையில் பல நாட்களாக நடந்து வந்த தாலிபான்கள் போரானது முடிவுக்கு வந்து விட்டதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பானது ஆப்கானிஸ்தான் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் பெண்கள்,குழந்தைகள் இவ்வளவு நாட்களாக பயத்துடன் வாழ்ந்து வந்தனர்.
தற்போது இந்த அறிவிப்பானது சற்றே ஆறுதலாக இருப்பதாக அந்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.இருப்பினும் ஆப்கானிஸ்தான் மக்கள் பதற்றமாகவே காணப்படுகின்றனர்.காபூல் விமான நிலையத்தை மட்டும் தாலிபான்கள் இன்னும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை.அதனால் பெரும்பாலான மக்கள் அங்கு தஞ்சமடைந்துள்ளனர்.
போர் முடிவுக்கு வந்துவிட்டதால் தாலிபான்களின் வன்முறை இனி இருக்காது என அந்நாட்டு மக்கள் எதிபார்க்கின்றனர்.மேலும் இந்தியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டு தூதரகத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக ஊடப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.