Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமெரிக்க ராணுவத்துக்கு சிக்கல்! தாலிபான்கள் எச்சரிக்கை!

Talibans warning to american force

Talibans warning to american force

அமெரிக்க ராணுவத்துக்கு சிக்கல்! தாலிபான்கள் எச்சரிக்கை!

சமீபத்தில் இஸ்லாமிய அமைப்பான தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியது உலகையே பேசுபொருளாக ஆக்கியது.மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களும் தலைவர்களும் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.அந்நாட்டு மக்கள் பலரும் வெளிநாடுகளுக்கு கிளம்பி சென்றனர்.இதனால் தாலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் முழுமையாக இருந்து வருகிறது.தாலிபான்கள் அங்கு அரசை நடத்தவும் ஆரம்பித்துவிட்டனர்.

ஷரியத் சட்டங்களை அமல்படுத்த தாலிபான்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.மேலும் அவர்களது முந்தைய ஆட்சி முறையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து வருகின்றனர்.நாட்டிலிருந்து வெளியேறும் மக்களை தாலிபான்கள் தடுக்கவில்லை.இருப்பினும் அங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கின்றனர்.முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே அமெரிக்க இராணுவமானது தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியவுடனே தங்களது படைகளை அங்கிருந்து காலி செய்தது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தாலிபான் அமைப்பிடமிருந்து தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் பாதுகாப்பையும் மேலும் அவர்களால் ஏற்பட்ட நஷ்டத்தையும் கணக்கில் கொண்டு தங்கள் படைகளை அங்கிருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்.

இதனால் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் ராணுவப் படையை அங்கிருந்து காலி செய்துவிட்டு அவர்கள் நாட்டுக்கே திரும்ப சென்றது.இதனிடையே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தாலிபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் அமெரிக்க நாட்டுக்கு காலக்கெடுவும் விதித்துள்ளது.

ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு அமெரிக்கப் படைகளும் இங்கிலாந்துப் படைகளும் கிளம்ப வேண்டும் என்றும் மேலும் அவகாசம் கேட்டால் அது தங்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனிடையே ஆகஸ்ட் 31 வரை அமெரிக்கர்கள் நாட்டை விட்டு கிளம்ப எந்தத் தடையும் இல்லை என அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அஆலோசகர் ஜேல் சல்லிவன் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version