ஆதாரம் இல்லாமல் எங்கள் தொழில் குறித்து பேசியது குற்றமே!! விஜய் சேதுபதியின் மீது காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார்!!

0
1002

பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக தயாரித்து விற்பனை செய்து வரப்படும் ஆத்தங்குடி டைல்ஸ் உண்மையானது இல்லை என பிரபல தொலைக்காட்சி ஒன்றிய தொகுப்பாளராக உள்ள விஜய் சேதுபதியின் முன்னிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தீபக் என்பவர் தவறான கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

 

செட்டிநாட்டு பாரம்பரியமான ஆத்தங்குடி டைல்ஸ் உண்மையானது இல்லை என்று உண்மைக்கு மாறாக (கேஏஜி டைல்ஸ்) தான் அசல் ஆத்தங்குடி டைல்ஸ் இன்று ஆதாரம் இல்லாமல் பேசியதற்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் காரைக்குடி DSP பார்த்திபனிடம் புகார் அளித்துள்ளனர்.

 

இது குறித்து ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர் அலெக்ஸ் தெரிவித்திருப்பதாவது :-

 

காரைக்குடியில் ஆத்தங்குடி டைல்ஸ் பல நூறு ஆண்டுகளாக பாரம்பரிய முறையில், இங்குள்ள வாரி மண் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு உடலுக்கு நன்மை பயக்க கூடியது. இந்தியாவிலேயே இன்றும் குடிசை தொழிலாக இந்த ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமன்றி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் வீடுகளிலும், ஓட்டல்களிலும் பதிக்கப்பட்டு வருகிறது.

 

இவ்வாறு உள்ள சூழ்நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதி தனியார் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஆத்தங்குடி டைல்ஸ் உண்மையானது இல்லை கேஏஜி டைல்ஸ் தான் அசல் ஆத்தங்குடி டைல்ஸ் என்றும் நடிகர் தீபக் என்பவர் தவறான கருத்தை பதிவிட்டு அதை ஒளிபரப்பு செய்தனர். இந்நிகழ்ச்சி மூலம் எங்கள் தொழில் மீது தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் அவர்கள் கூறியதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. எனவே எங்கள் மீது வீண்பழி சுமத்தி அவதூறு கூறிய கே.ஏ.ஜி., டைல்ஸ் மீதும், விஜய் டிவி நிர்வாகத்தின் மீதம் மற்றும் பிக்பாஸை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளோம்.தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் முதல்வர், பிரதமர், மத்திய தொழில்துறை அமைச்சகம் அனைத்திலும் புகார் அளிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.