Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எடப்பாடி பழனிச்சாமியின் சாமர்த்தியம்! உறுதியானது கூட்டணி!

அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு வருகின்றன. எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் தொடரும் என்று அந்த கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா சமீபத்தில் அறிவித்திருக்கிறார். கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு கையாண்டார் என்பது தொடர்பாக அந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த நவம்பர் மாதம் வாக்கில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் முன்னிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி நிலைத்திருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இவர் பன்னீர்செல்வம் அவர்களும் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு முன்பாகவே அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று அந்தக் கட்சியின் சார்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருந்தது.

ஆனாலும் தமிழக பாஜக அவையினர் இவற்றையெல்லாம் நாங்களே முடிவு செய்வோம் என்பது போல உரையாற்றி வந்தார்கள். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் காட்சிகள் மட்டுமே அதிமுக கூட்டணியில் தொடரும் என மற்ற கட்சிகள் வெளியேறிக் கொள்ளலாம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் பாஜக பாமக தேமுதிக போன்ற கூட்டணி கட்சிகளை அவருடைய இந்த பேச்சின் காரணமாக, அதிர்ந்து போய் இருந்தனர் ஆனாலும் வேறு வழி தெரியாமல் அடுத்த சில நாட்களிலேயே தமிழக பாஜகவின் பொறுப்பாளர் சி.டி.ரவி மாநிலத்திலேயே பெரிய கட்சியாக இருக்கும் அதிமுகவே முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் அந்த வகையில் அதிமுக வெளியிட்ட அறிவிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று பத்திரிகையாளர்களிடத்தில் அறிவித்திருந்தார்.

சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் எங்களுடைய கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பிற்கு எடப்பாடி பழனிச்சாமியின் அண்மை காலத்தில் நடைபெற்ற டெல்லி பயணம் தான் காரணம் என்று தெரிவிக்கிறார்கள்.

மறுபுறமோ தேமுதிக பாமக மற்றும் சமத்துவ மக்கள் கட்சி போன்ற கூட்டணிக் கட்சிகளும் தேர்தலில் அதிகமான தொகுதிகளை எதிர்பார்த்திருந்தனர். குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே அழுத்தம் கொடுத்து வருகின்றது. ஆனாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரம் தொடர்பாக ராஜதந்திர நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயத்தில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி போன்ற மூத்த அமைச்சர்களை வைத்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கிட்டத்தட்ட பாமக உடனான அதிமுக கூட்டணியை உறுதி செய்து விட்டதாக சொல்கிறார்கள்.

அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஒரு சில காரணங்களை பாமக ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கிறார்கள். அதேபோல தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் அதிகமான இடங்களை எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் ஒரு சில இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசிய விதம் அதிமுகவினர் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி கண்டிப்புடன் இருந்தபடியால் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை உடனே ஆரம்பிக்க வேண்டும் என்று தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் பிரேமலதா விஜயகாந்த். அதேபோல அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவர்களும் தெரிவித்திருக்கிறார் .ஆனால் திமுக கூட்டணி கட்சிகளிடையே தற்போது வரை இழுபறி நீடித்து வருவதாக சொல்கிறார்கள்.

Exit mobile version