Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மார்கழி கோலம்: பச்சரிசி இருந்தால் 2 நிமிடத்தில் சூப்பரான கோலப்பொடி ரெடி!!

Tamarind

Tamarind

வீட்டில் சுப நிகழ்ச்சி தினங்களில் வாசலில் வண்ணக் கோலமிடுவதை உங்களில் பலர் வழக்கமாக கொண்டிருப்பீர்கள்.தற்பொழுது மார்கழி மாதம் தொடங்கி விட்ட நிலையில் தினமும் வாசலில் கோலமிட்டு வீட்டை அழகுபடுத்தும் பழக்கம் பெண்களிடம் இருக்கிறது.அடுத்து தை பொங்கல் நாளில் வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு கோலமிட கடைகளில் விற்கும் பொடியை வாங்கி பயன்படுத்துவதை விட பச்சரிசி கொண்டு வீட்டிலேயே கோலப்பொடி தயாரித்து யூஸ் பண்ணுங்க.

தற்பொழுது பெரும்பாலான கடைகளில் தரமற்ற கோலப்பொடி விற்கப்படுகிறது.இதை பயன்படுத்துவதால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும்.எனவே பச்சரிசி,எலுமிச்சை,கற்பூரம் ஆகிய 3 பொருட்களை கொண்டு ஈஸியான முறையில் வீட்டிலேயே கோலப்பொடி தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

1)பச்சரிசி – ஒரு கப்
2)எலுமிச்சை – ஒன்று
3)கற்பூரம் – இரண்டு

தயாரிக்கும் முறை:

முதலில் ஒரு கப் அளவிற்கு பச்சரிசியை நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு மிக்சர் ஜாரை ஈரமில்லாதவாறு துடைத்து காய வைத்த அரிசியை அதில் கொட்டி இரண்டு நிமிடங்களுக்கு அரைக்கவும்.

பச்சரிசி நன்றாக அரைப்படவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை பச்சரிசி மாவில் சேர்த்க்கவும்.

அதன் பிறகு இரண்டு கற்பூரத்தை இடித்து பொடியாக்கி பச்சரிசி மாவில் கொட்டி நன்றாக கலந்துவிடவும்.அதன் பிறகு ஒரு அகலமான தட்டு அல்லது பேப்பரில் இந்த அரிசி மாவை கொட்டி சிறிது நேரம் உலரவிட்டு எடுத்தால் கோலப்பொடி ரெடி.

Exit mobile version