மலையாள திரைப்பட இயக்குனரை காதலிக்கும் தமிழ் நடிகை!!

0
86
Tamil actress in love with Malayalam film director!!

புகழ்பெற்ற டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக விளங்கு பவரும் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி மலையாளத் திரைப்படங்களிலும் நடித்தவரான ரவீனா ரவி அவர்கள் தன்னுடைய காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார்.

புகழ்பெற்ற டப்பிங் கலைஞரான ஸ்ரீஜா ரவியின் மகள் தான் ரவீனா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தனது படிப்பை முடித்துவிட்டு, தன் தாயைப் போன்று தனக்கும் நல்ல குரல் வளம் உண்டு என்பதால் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக சினிமா துறையில் நுழைந்தார்.

இவர் முதன் முதலில் சமுத்திரக்கனி இயக்கிய சாட்டை படம் மூலம் டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகம் ஆனார். மேலும் இதனை தொடர்ந்து மிகவும் பிரபலமாக விளங்கும் நிமிர்ந்து நில் படத்தில் அமலா பால், ஜீவா படத்தில் ஸ்ரீ திவ்யா, கத்தி படத்தில் சமந்தா ஆகியோருக்கு டப்பிங் பேசியனார் ரவீனா.

இதைத்தொடர்ந்து பல படங்களுக்கு முன்னணி டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக ரவீனா திகழ்ந்து வந்தார்.இப்படி டப்பிங் ஆர்டிஸ்டாக கோலோச்சி வந்த அவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.

மேலும் இவர் காவல்துறை உங்கள் நண்பன், ராக்கி, வீரமே வாகை சூடும், மாமன்னன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்திலும் இவர் நடித்துள்ளார். இது மக்களிடையே இவரை மேலும் கொண்டு சேர்த்தது என்றே கூறலாம்.

தமிழ் சினிமா துறையை தொடர்ந்து மலையாள சினிமா துறையிலும் இவர் நடிக்க தொடங்கினார். அப்படி இவர் கமிட்டான படம் தான் வாலாட்டி. மேலும் இத்திரைப்படத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே இத்திரைப்படத்தின் இயக்குனரான தேவன் ஜெயக்குமாருடன் ரவீனாவிற்கு காதல் மலர்ந்துள்ளது. இதனை ரவீனா அவர்கள் தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.