Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ் பிக் பாஸ் சீசன் 4 புரோமோ ரெடி!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியில் ஒன்றாகும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில் நான்காவது சீசன் ஹிந்தி தெலுங்கு போன்ற மொழிகளில்  தொடங்கப்பட்ட நிலையில் தமிழில் மட்டும் எப்போ ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வியல்ல தொடங்கிவிட்டது.

இந்த கேள்விக்கு முடிவு கட்டும் வகையில் தற்போது கமலஹாசன் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் கடந்த வாரம் பிக் பாஸ் சீசன்4-க்கான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4 முதல் புரோமோ ரெடியாகி உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த  நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் அண்மையில் வெளியாவதும், போட்டியாளர்கள் அதனை நிராகரித்தது என்ற பல வதந்திகள் இணையதளத்தில் உலாவருகிறது.

ஆனால் கூடிய சீக்கிரத்தில் தமிழிலும் பிக் பாஸ் போர் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version