Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜகமே தந்திரம்.! தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் கதை லீக் அவுட்.!!

நடிகர் தனுஷ் நடிக்கும் “ஜகமே தந்திரம்” படத்தின் மையக்கருவை அப்படத்தில் நடிக்கும் ஆலிவுட் நடிகரே போட்டுடைத்த தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் ஜகமே தந்திரம் தயாராகி வருகிறது. இப்படம்
லண்டனில் இந்தியர்களால் ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி எடுத்துள்ளதாக படத்தில் நடிக்கும் ஆலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு பேட்டியில் கூறியுள்ளார். சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது;

இலண்டனில் இந்தியர்களால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க பிரபல கேங் ஸ்டாரான காஸ்மோ, இந்தியாவில் மிகப்பெரும் தாதாவாக வலம் வரும் தனுஷை லண்டன் பிரச்சினையை தீர்க்க வேலைக்கு அமர்த்துவதாகவும், பின்னர் அவருக்கே வில்லனாக மாறும் வகையில் எழுதப்பட்ட படத்தின் முக்கிய கருத்தை தனது பேட்டியில் காஸ்மோ போட்டுடைத்துள்ளார். ஒரு படம் வெளியாவதற்கு முன்பே அதன் கதை வெளியானால் ரசிகர்களிடையே சுவாரஸ்யம் இருக்காது என்பதை உணராமல்’ படத்தின் கதையை லீக் அவுட் ஆன சம்பவம் ஜகமே தந்திரம் படத்தின் வெற்றிக்கு பின்னடைவாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version