Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமேசான் செயலியில் தமிழ்மொழி இணைப்பு:!! உலகறியும் தமிழ்மொழியின் உன்னதம்!!

அமேசான் செயலியில் தமிழ்மொழி இணைப்பு:!! உலகறியும் தமிழ்மொழியின் உன்னதம்!!

தீபாவளி நெருங்கும் வேளையில்,துணி கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் தீபாவளி ஆஃப்ரகளை கொடுத்து தள்ளும் நிலையில் ஆன்லைன் வணிகமும் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் இணையவழி வர்த்தக செயலிகளில்,
பண்டிகை நாட்களுக்கு முன்னதாக அனைத்து பொருட்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருவது வழக்கம்.இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் தனது செயலில் தற்போது தமிழ் மொழியை இணைத்துள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம்,பொருட்கள் பற்றிய விரிவான விவரம்,
சலுகைகள்,மற்றும் பொருட்களை வாங்கும் பொழுது தங்கள் அட்ரஸை குறிப்பிட, பணம் பரிமாற்றம் செய்ய, போன்ற அனைத்தையும் தற்போது தமிழ் மொழியில் தெரிந்து கொள்ளும் வசதியை அமேசான் உருவாக்கியுள்ளது.

Exit mobile version