Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ் மொழியை நேசிக்கும் சிறுவர்கள்! இணையத்தில் வைரலாகும் ‘அ’ புகைப்படம்..!!

தமிழ் மொழியை நேசிக்கும் சிறுவர்கள்! இணையத்தில் வைரலாகும் ‘அ’ புகைப்படம்..!!

உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் முதன்மையானது நம் தாய்மொழி தமிழ். எந்த தகவலையும் அறியவும், தெரியவும், புரியவும், உணரவும், ஆராயவும் முதன்மையாக இருப்பது மொழிகள்தான். அதிலும் நம் தமிழ்மொழி தனித்துவமான ஒன்றாகும்.

மொழி என்பது பேச்சாக உள்ளுறைந்து நம் வாழ்வின் வரலாற்று வழிகாட்டியாய் இருக்கிறது. ஒரு இனத்தின் நாகரிகத்தை அவ்வினத்தின் மொழியே முதன்மையாக வெளிப்படுத்தும். பண்பாட்டின் அடையாளம் தாய்மொழி, தாயிடம் இருந்து கற்பதானலே இதற்கு தாய்மொழி எனப் பெயர் வந்துள்ளது. தகுதி உள்ளதே தப்பி பிழைக்கும் என்ற டார்வினின் கோட்பாட்டின்படி, ஒவ்வொரு மனிதனும் தப்பிப் பிழைக்க காரணம் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை நவீனப்படுத்தி தற்காத்துக் கொள்வதுதான் காரணமாகும்.

சங்க இலக்கண இலக்கியத்தில் தமிழ் உண்டு, வரலாற்று கல்வெட்டு மற்றும் செப்பு பட்டயங்களில் தமிழ் உண்டு. தற்போதைய நவீன ஆங்கில மோக கலாச்சாரத்தில் பெருமளவு தமிழ் பற்று குறைந்துவிட்டது. தாய்மொழியின் அருமை, பெருமைகளை நேசிக்காமல், அறியாமல் போனதன் விளைவே அயலார் மொழியை அடுத்த சந்ததி க்கும் கடத்துகிறார்கள் இந்நிலை மாற வேண்டும், மாற்றம் வேண்டும்.

இனி தமிழ்மொழி :

தமிழ்மொழி பற்று பெரியவர்களிடம் மட்டுமல்ல சிறுவயது முதலே தமிழை நேசிக்கும் வகையில் மாறியுள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று. படத்தில் இருக்கும் சிறுவனின் தலையில் தமிழ் மொழியின் உயிரெழுத்தான “அ” என்ற முதல் எழுத்தை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சினிமாவை பார்த்து தலையை வெவ்வேறு வித விதமாக இளைஞர்கள் வெட்டிக் கொள்வது இயல்புதான் என்றாலும். தமிழ்மொழியை அடையாளப்படுத்தும் இச்சிறுவனின் மொழிப்பற்று பாராட்டத்தக்கதே.

Exit mobile version