தமிழகம் மற்றும் கேரள மாநில ஆர் எஸ் எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் உயிருக்கு ஆபத்து! உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை!

0
141

காந்தியடிகளின் பிறந்தநாளான நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் தமிழ்நாடு புதுவை கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 8 அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் அது தொடர்பான அதிகாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது. இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தேசிய புலனாய்வு முகமையின் இந்த அதிரடி சோதனையை கண்டிக்கும் விதமாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தனர்.

மேலும் அந்த அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கினர்.

மேலும் ஆர் எஸ் எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நேற்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சென்னையில் மனித சங்கிலி போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன்.

இந்த நிலையில் ஆர் எஸ் எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்தும் அதே நாளில் மற்ற அரசியல் கட்சிகள் போராட்டங்களை அறிவித்திருப்பதால் காவல்துறையினரால் பாதுகாப்பு வழங்க முடியாது.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்று தெரிவித்து தமிழக அரசு ஆர் எஸ் எஸ் அமைப்பின் அணிவகுப்பிற்கு தடை விதித்தது.

ஆர் எஸ் எஸ் தரப்பில் இந்த தடை உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அக்டோபர் மாதம் 2ம் தேதிக்கு பதிலாக நவம்பர் மாதம் 6ம் தேதி ஆர் எஸ் எஸ் அமைப்பின் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும்.

மேலும் காவல்துறையினர் சரியான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு வழங்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கையை சந்திக்க நேரும் என்று உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உட்பட 8 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்கள் மீது மார்பு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஐந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் கேரள மாநிலத்தில் நான்கு ஆர் எஸ் எஸ் முக்கிய நிர்வாகிகளின் உயிருக்கு பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்திருக்கிறது.

இவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கவும் முடிவு செய்துள்ளது மத்திய அரசு. அந்த ஒன்பது பேரின் பெயர் உட்பட அனைத்து விபரங்களையும் மாநில அரசுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சம்பந்தப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் காவல்துறையின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நவம்பர் மாதம் 6ம் தேதி பேரணி நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதன் முக்கிய நிர்வாகிகளுக்கு மிரட்டல் வந்திருப்பது காவல்துறையினரை உஷாராக இருக்கச் செய்துள்ளது.