Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக என்றைக்கும் விவசாயிகளின் தோழன்! தமிழக பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கருத்து 

#image_title

பாஜக என்றைக்கும் விவசாயிகளின் தோழன்! தமிழக பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கருத்து

பாஜக என்றைக்கும் விவசாயிகளின் தோழன் என தமிழக பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் சில இடங்களில் மத்திய அரசாங்கம் நிலக்கரி இருக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து அறிவித்திருக்கிறது.

அதன் அடிப்படையில் மத்திய அரசாங்கத்தை கண்டித்து பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையான விவசாயிகளுடைய கோரிக்கைகளை நான் எங்கள் மாநில தலைவர் மரியாதைக்குரிய  திரு கே.அண்ணாமலை அவர்களிடம் எடுத்துரைத்திருக்கின்றேன். அவர் நாளை காலை 10 மணிக்கு மத்திய சுரங்க துறையினுடைய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி அவர்களை சந்தித்து இது பற்றி உடனடியாக முடிவெடுப்பதாக உறுதியளித்திருக்கின்றார்கள்.

பாரதிய ஜனதா கட்சி என்றைக்கும் விவசாயிகளின் தோழனாக விவசாயிகளின் உற்ற நண்பனாக விவசாயிகளுடைய நலனை மட்டுமே கருத்தில் கொள்ளக்கூடிய கட்சியாக விவசாயிகளுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய கட்சியாக இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி இருப்பதை ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளது மத்திய அரசாங்கம். நாட்டில் எந்தெந்த இடத்தில் நிலக்கரி மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இருக்கின்றன என்பதை ஆராய்ச்சி செய்து அறிவிப்பது வழக்கமான ஒன்று.

அறிவிக்கப்பட்டாலும் கூட அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநில அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் இந்த திட்டத்தை மத்திய அரசாங்கத்தால் செயல்படுத்த முடியாது.

மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது மத்திய அரசாங்கத்தை கண்டித்து போராட்டம் நடத்த தூண்டுவது போன்றவை மத்திய அரசாங்கம் இந்தியை திணிப்பதாக மக்களை ஏமாற்றியதை போல இதுவும் ஒரு ஏமாற்று வேலையாக தெரிகிறது.

கேவலமான இந்த திமுக அரசாங்கம் தான் காவிரியில் கர்நாடகா அரசு அணை கட்டிக்கொள்ள காரணமாக இருந்த திமுக அரசாங்கம். டெல்டா விவசாயிகளின் அழிவிற்கு காரணமாக இருந்திருக்க வேண்டிய மீத்தேன் திட்டத்திற்கு ஈஸ்டன் எனர்ஜி நிறுவனத்துடன் கையொப்பமிட்ட அரசாங்கம். அவர்களைப் போல அல்ல எங்கள் அரசாங்கம் ஆராய்ந்து பார்த்து அதன் அடிப்படையில் உண்மையாகவே விவசாயிகளுக்கு பொதுமக்களுக்கு பாதிப்பு வரும் என்ற எந்த திட்டத்தையும் எங்கள் அரசாங்கம் செயல்படுத்தாது என்பதை ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் தெளிவுபடுத்திருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் கடந்த ஆட்சியில் ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற எண்ணற்ற திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றதும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்தும் அந்த திட்டங்களை கைவிட்ட அரசாங்கம் எங்களுடைய அரசாங்கம் உங்களைப்போல கூலிக்கு மாரடிக்கும் அரசாங்கம் அல்ல எங்கள் அரசாங்கம் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version