Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

2022-23ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்! மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

2022-23ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது அதற்காக இன்றைய தினம் தமிழக சட்டசபை கூடவிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 10:00 மணி அளவில் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த வருடமும் காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் சட்டசபையில் சட்டசபை உறுப்பினர்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது என்று சொல்லப்படுகிறது.

நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வாசிக்கும்போது சட்டசபை உறுப்பினர்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் தொடுதிரை லேப்டாப்பில் நிதிநிலை அறிக்கை தொடர்பான விவரங்களை பார்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதை அனைவரும் பார்க்கும் விதத்திலும் சட்டசபையில் மிகப் பெரிய திரையில் ஒளிபரப்ப கணினிகள் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளில் சில அறிவிப்புகள் இடம்பெறலாம் என்றும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாக இந்த நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பில் அறிவிப்புகள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு பிறகு பிற்பகல் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூட்டப்பட்டு நிதிநிலை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படுகிறது.

அதேபோல தமிழக சட்டசபையில் நாளைய தினம் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இதனை தாக்கல் செய்யவிருக்கிறார். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளும் வெளியாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.a

Exit mobile version