Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்!

#image_title

இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்!

மக்களவை தேர்தல் தேதிக்கான அறிவிப்பை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் எனத் தெரிகிறது.
தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதன் கீழ் மக்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட இயலாது.

எனவே,மாநில அரசுகள் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கலை மேற்கொள்வதன் வரிசையில் தமிழ் நாடு அரசு இன்று தாக்கல் செய்ய உள்ளது மக்களவை தேர்தல் நெருக்கத்தில் இடம்பெறும் பட்ஜெட் என்பதால் அது குறித்தான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 12 தேதி நடப்பாண்டு தமிழக பேரவையின் முதல் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் உரையை பாதியில் நிறுத்தி சென்றது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது, தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பிப்.13 அன்று தொடங்கி இரு நாட்கள் நடைபெற்றது. பிப்.15 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இவ்வாறான பரபரப்பான சூழ்நிலையில் தான் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப்.19)மீண்டும் கூடுவதை அடுத்து, மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இது, நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, நாளை (பிப்.20) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார்.

விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் அரசியல் விமர்சகர்கள், பிற கட்சியினர், மற்றும் பொது மக்களிடையேள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version