Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோடிக்கோடியாக மோடியிடம் பணம் கேட்ட தமிழக முதல்வர்:? திகைத்துப்போன பிரதமர் மோடி!

இன்று பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களிடம் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகின்றார்.இந்த ஆலோசனையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார்.

மேலும் தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகளையும் முதலமைச்சர் முன்வைக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. அதில் கீழே உள்ளவற்றை எல்லாம் கோரிக்கையாக முன் வைக்கப் படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

* நிலுவையில் உள்ள ஏப்ரல் – ஜுன் மாத ஜிஎஸ்டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

* மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு சிறப்பு நிதியாக 9000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்.

* கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு 9,000 கோடியில் இருந்து 3000 கோடி ரூபாய் அவசரகால நிவாரணமாக ஒதுக்க வழிவகை செய்ய வேண்டும்.

* சிறு, குறு நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக ரூ.1,000 கோடி மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.

* உயர்தர வெண்டிலேட்டர்களை தமிழகத்திற்கு கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதியளிக்க வேண்டும்.

* நெல் கொள்முதல் செய்யவதற்காக வேண்டி ரூ.1,321 கோடி ஒதுக்க வேண்டும்.

* பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து
தமிழ்நாட்டிற்கு பிசிஆர் சோதனைக்கான செலவின் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்

* நவம்பர் வரை நியாய விலை கடைகளில் வழங்க 55, 637 மெட்ரிக் டன் பருப்பு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும்

Exit mobile version