கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!
காமராஜர் பிறந்த நாளையொட்டித் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்திருக்கிறார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான காமராஜர் பிறந்த தினமான இன்று கல்வி வளர்ச்சித் தினமாக தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் காமராஜரின் பிறந்தநாள் அன்று தான் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவு திட்டத்தை முன்னால் முதலமைச்சர் காமராஜ் அறிமுகப்படுத்தினார். அது இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இவரது பிறந்த நாள் விழாவை கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கர்மவீரர் காமராஜரின் 119 ஆம்ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள காமராஜரின் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திருவுருவப் படத்திற்கு தமிழக அரசு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார். இந்த நிகழ்வில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்பாலு அமைச்சர்கள் பொன்முடி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் கீதா, ஜீவன் வெள்ளக்கோயில் சுவாமிநாதன்,அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக எம்.எல் ஏக்கள்,எம்பிக்கள் ஆகியோரும் பங்கேற்று கர்மவீரர் காமராஜருக்கு மலர்தூவி மரியாதை அளித்திருக்கின்றனர். மேலும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வந்திருக்கின்றனர். காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி தி_நகரில் உள்ள காமராஜர் இல்லத்திலும் அவர் வசித்த இல்லத்திலும் பிறந்த நாள் விழாவானது தமிழக அரசால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு இருக்கிறது. அங்கும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விடுகின்றனர்.