பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு! முதல்வர்

0
145

பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக வருகின்ற 7ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

https://twitter.com/TNGOVDIPR/status/1312298119220977664?s=20
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளனர்.

வேளாண் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் பாசனத்திற்காக அக். 7ம் தேதி முதல் 120 நாட்களுக்கு மொத்தம் 1037 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், தேனி மாவட்டம், தேனி வட்டம் மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயப் பெருமக்கள் அனைவரும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.