tamil nadu government: தமிழக முதல்வர் ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது பேசினார்.
தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை என பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. அந்த வகையில் பெண்கள் உயர்கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம். இந்த திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறது தமிழக அரசு அத் திட்டத்தை பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி இருக்கிறார். அதாவது, புதுமைப் பெண் திட்டம் என்பது அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வரும், மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் திட்டம் ஆகும். இத் திட்டத்தில் புதிதாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று உயர்கல்வி சேர்ந்து இருக்கும் மாணவிக்கு இத் திட்டம் பொருந்தும் என கூறியிருக்கிறார். மேலும் இத் திட்டத்தில் சுமார் 4.75 லட்சம் மாணவிகள் பயன் அடைந்து இருக்கிறார்கள் என்றும், தமிழக அரசு சார்பில் இத்திட்டத்திற்கு சுமார் 590 கோடி செலவு இது வரை செலவு செய்து இருப்பதாக கூறினார். மேலும், பெண்களின் கல்வியை போற்றுவதே திமுகவின் கடமை என்று கூறினார்.