Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு! சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்து விட்டீர்களா? இல்லை என்றால் உடனே இதைச் செய்யுங்கள்!

தமிழகத்தில் சம்பா பருவ பயிர் காப்பீட்டை வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதற்காக இன்றும், நாளையும் பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்கும் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நடப்பாண்டில் சம்பா நெற்பயிரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய ஏதுவாக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் பொது சேவை மையங்கள், தொடக்க கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மேற்கொண்டுள்ளது. ஆகவே விவசாயிகள் நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பருவ மழை காலங்களில் வெள்ளம் புயல் மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக விவசாய பெருங்குடி மக்கள் பாதிக்கும் பொழுது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மற்றும் அவருடைய வருமானத்தையும் பாதுகாக்கும் விதத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் 2022 2023 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு, மாநில அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை உண்டான போதிலும் 2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 202-23 ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக செப்டம்பர் 15 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரையில் 12. 26 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு சுமார் 22 லட்சம் விவசாயிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில் ,சம்பா நெற்பயிருக்கான காப்பீடு தஞ்சை, நாகப்பட்டினம், மோ, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நவம்பர் மாதம் 15ஆம் தேதி முடிவடைவதால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முழுவீச்சில் இயங்க வேளாண்மை, உழவர் நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆகவே இன்றும், நாளையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்படுவதால் இதுவரையில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் சரியான ஆவணங்களுடன் நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தில் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை, உழவர் நலத்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது.

Exit mobile version