செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!!
முதல்வரின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால் கைது செய்யப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அவரது உடல்நிலையின் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வசம் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றவாளி இல்லை, குற்றவாளி என தீர்ப்பளித்தால் மட்டுமே அமைச்சராக நீடிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் எதிர்ப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சரின் பரிந்துரையை மறுப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
மாநில அரசின் கட்டுப்பட்டவர் ஆளுநர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது, அமைச்சரவை மாற்றம் குறித்த அனைத்து முடிவுகள் எடுக்கும் அதிகாரங்கள் முதலமைச்சருக்கே உள்ளது என எம்பி கனிமொழி கூறியுள்ளார். முதலமைச்சரின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் ஆளுநருக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.