அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுபடுத்த விதிக்கப்பட்ட அடுத்த கட்டுப்பாடு

0
147
Tamilnadu Assembly-News4 Tamil Online Tamil News

அதிகரித்துவரும் கொரோனாவின் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுபடுத்தும் வகையில் சில மாவட்டங்களில் செயல்படும் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வேகமா பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்ற பகுதிகளில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அப்பகுதிகளில் செயல்படும் கடைகளுக்கு நேரக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரத்தில் வர்த்தக சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் மக்களின் நலன் கருதியும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதியும் நாளை 7 மணி முதல் 3 வரை மட்டுமே கடைகள் திறந்து வைத்திருக்க வேண்டும் என வர்த்தக சங்கம் கூறியுள்ளது.

அதன்படி மருந்து கடைகள்,பால் மற்றும் ஓட்டல்களுக்கு நேரக்கட்டுபாடு இல்லை எனினும் ஓட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி அளித்துள்ளது .

சேலம் மாவட்டத்திலும் நாளை மறுநாள் முதல் ஜூன் 30 வரை கடைகளின் திறப்பு நேரத்தை குறைக்க வர்த்தக சங்கம் முடிவெடுத்துள்ளது.அதன்படி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.