தமிழக அரசு செம அறிவிப்பு.. இவர்களின் வங்கி கணக்கிற்கு வரப்போகும் பணம்!! உடனே செக் பண்ணுங்க!!

0
240
Tamil Nadu government announcement.. Money coming to their bank account!! Check now!!

தமிழக அரசு செம அறிவிப்பு.. இவர்களின் வங்கி கணக்கிற்கு வரப்போகும் பணம்!! உடனே செக் பண்ணுங்க!!

மகளிர் உரிமை தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டு தற்பொழுது வரை 1.40 கோடி பெண்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் தகுதி வாய்ந்தும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் விண்ணப்பம் செய்யும் படி தமிழக அரசு கால அவகாசம் கொடுத்தது. அதன்படி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இந்த உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

தேர்தல் சமய காலத்தினால் இது ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்தல்கள் முடிவடைந்து விட்டதால் மீண்டும் இதன் பணியை தொடங்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் முன்பு விண்ணப்பித்த பெண்களுக்கு வரும் மாதம் முதல் 1000 வழங்குவது குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். இதற்காக நாளை இந்தப் பெண்மணிகளின் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் செலுத்தி உறுதி செய்து கொள்ளும் பணியை நாளை துவங்க உள்ளதாக கூறியுள்ளனர்.

மேற்கொண்டு அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களின் மனைவிகள் மற்றும் கார்ப்பரேஷனில் பணிபுரியும் நிர்வாகிகளின் மனைவிகள் மற்றும் மறுவாழ்வு மையத்தில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இம்மாதம் இறுதிக்குள் இவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முகாம்கள் அமைப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த முறை விண்ணப்பித்த பயனாளிகளுக்கு இம்மாத முதல் 1000 ரூபாய் உரிமை தொகை செலுத்தப்படுமென்றும் மேற்கொண்டு இதனை உறுதி செய்யும் வகையில் நாளை ஒரு ரூபாய் அவர்களின் வாங்கி கணக்கிற்கு அனுப்ப உள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.