விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு தடை?

0
132

தமிழகத்தை பொருத்தவரையில் வருடம் வருடம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும்.விநாயகர் சதுர்த்தி என்றாலே ஒரு வாரத்திற்க்கு முன்பிலிருந்தே,விநாயகர் சிலையை வாங்க ஆரம்பித்து விடுவர்.மேலும் விநாயகர் சதுர்த்தியிலிருந்து,3,5,7நாட்கள் என பூஜை செய்து பின்பு பவானி ஆறு,காவிரி ஆறு,போன்ற சிறப்புமிக்க நீர்நிலைகளில் கரைத்துவிட்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த வருடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வரும் நிலையில், கொரோனா பரவுதலை கருத்தில்கொண்டு தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்திலிருந்தே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசால் அனைத்து மதம் சார்ந்த விழாகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது.தற்போது ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரப்போகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் அரசு தடை விதித்துள்ளது.இது குறித்து ஒரு செய்தி தொகுப்பினை அரசு வெளியிட்டுள்ளது அவற்றில் கூறியதாவது:

கொரோனா எதிரொலியால் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழி படுவோ, ஊர்வலமாக செல்லவோ, நீர்நிலைகளில் கரைக்கவோ, அனுமதி இல்லை என தமிழக அரசு சற்று முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்து அமைப்புகள் ஆதரவளித்தன் அடிப்படையில், இந்த முடிவு அரசு எடுத்துள்ளதாக, தமிழக அரசு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை மக்கள் அவரவர் வீடுகளிலிருந்து கொண்டாட வேண்டுமென தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.