மருத்துவர்களின் பணிநேரம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களின் பணிநேரம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை இன்று ( 08.08.2022) முதல் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் அவசர மாநில செயற்குழு காணொளி வாயிலாக கூட்டப்பட்டதாகவும், அதில் பல்வேறு போராட்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அச்சங்கத்தின் தலைவர் செந்தில் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் பணி நேரம் காலை 9 மணியிலிருந்து 4 மணி வரை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இது தற்போது காலை 8 மணி முதல் 4 உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருப்பது மனித உரிமையை மீறும் செயல் எனவும் இது உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாணை உடனடியாக திரும்பப் பெறப்படவில்லை எனில்,
1. மாவட்டம் தோறும் தர்ணா போராட்டம் நடைபெறும்.
2. பொது சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் அரசு ரீதியான அனைத்து வாட்சப் குழுக்களில் இருந்தும் வெளியேறுதல்
3.பொது சுகாதார உயர் அதிகாரிகளின் அலுவல் கூட்டங்களை புறக்கணித்தல்
4.ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களை புறக்கணித்தல்
5. துறை ரீதியான எந்த ஒரு அறிக்கையையும் அனுப்புவதில்லை.
என இவையனைத்தும் போராட்ட நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்படும் என
அச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.