தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்ற துறையின் கீழ் பெண்களுக்கான உதவிகள் மற்றும் அரசு நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் 181 என்ற பெண்கள் உதவி எண் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைநகர் சென்னையில் இயங்கி கொண்டிருக்கும் பெண்கள் உதவி எண் மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் பெண்கள் நவம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலை வகை: தமிழக அரசு வேலை
நிறுவனம்: சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம்(பெண்கள் உதவி எண் அழைப்பு மையம்)
பணியின் பெயர்:
*கால் ரெஸ்பாண்ட்டர் – 05
*பல்துறை பணியாளர் – 02
*இரவு காவலர் – 03
காலிப்பணியிடங்கள்:
இப்பணிகளுக்கு என்று மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சமூகப்பணி,பொது நிர்வாகம்,உளவியல் உள்ளிட்ட படிப்புகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க உள்ள நபர்களுக்கு அதிகபட்ச வயது தகுதி 55 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
மாத ஊதியம்:
கால் ரெஸ்பாண்ட்டர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.16,500 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பல்துறை பணியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரவு காவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியமர்த்தபட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.tn.gov.in/job_opportunity என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 11-11-2024