தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் தகுதி பெற மாணாக்கரின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8.00 இலட்சத்துக்குள் இருந்தால் மற்றும் மாணவர்தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வினை மேற்கொண்டால் அவருக்கு மாதம் 25 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார்.
இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை மாணாக்கருக்கு மாதம் ரூ.10,000/-மும் (6 மாதத்திற்கு) மற்றும் முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25,000/-மும் மொத்த படிப்பின் காலமான மூன்று வருடமும் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் நெறிமுறைகளை தெரிந்து கொள்ள அரசினுடைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தினை 2024-2025 ஆம் ஆண்டில் செயல்படுத்த இத்திட்டத்திற்கான விண்ணப்பம் 05.11.2024 -லிருந்து இணையவழியிலும் (Online) மற்றும் இயன்முறையிலும் (Offline) வரவேற்கப்படுகின்றன என்ற தகவலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் இதுவே கடைசி நாள் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். இல்லையென்றால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை இயக்குநர், பழங்குடியினர் நலன், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு 30.11.2024 க்கு நேரில் சென்றோம் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.