இனி காலையில் நேர தாமதமாக கூட பணிக்கு வரலாம்!! மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!!

0
180
Tamil Nadu government has issued an action order to the electricity department!!

இனி காலையில் நேர தாமதமாக கூட பணிக்கு வரலாம்!! மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!!

தமிழ்நாட்டில் அரசு அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்வாரிய துறைக்கு கொடுத்த உத்தரவு ஆகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் குடியிருப்பு, அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலை நிறுவனம் என்று பலவற்றிற்கு மின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் மின்மாற்றி  திறனை மேம்படுத்துதல் போன்ற பல காரணங்களால் மின் வெட்டு பிரச்சனையும் ஏற்படுகிறது.இதனால் திமுக மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் கிளம்பியுள்ளது .

கோடைக்காலத்தில் தினசரி மின்தேவை 18 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த நிலையிலும் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இவற்றில் பயன்படுத்த படும் மின் சாரத்தின் அளவு மட்டும் தற்பொழுது வரையிலும்  குறையவில்லை.

அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் சென்னையில் மட்டும் தினசரி 3000 மெகாவாட்டாக மின்தேவை அதிகரித்துள்ளது.அதிலும் 14 ம் தேதி மட்டும் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு 4,300 மெகாவாட்டாக உச்சத்தை எட்டியுள்ளது.

இதேபோன்று தமிழ்நாட்டில் வேறு சில மாவட்டங்களிலும் மின் தேவை அதிகரிக்கிறது. அதிலும் இரவில் அதிக  அளவு மின் சாதனத்தை பயன் படுத்துவதால் மின் சாதனங்கள் பழுதடைந்து மின் தடை ஏற்படுகிறது.

இவ்வாறு இரவில் ஏற்படும் மின் தடை காரணமாக அதிக அளவில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகிறது .இவற்றை சரி செய்வதற்கு கூட போதுமான ஊழியர்கள் இல்லாத பட்சத்தில் இரவு ஏற்பட்ட மின்தடையை மறுநாள் காலையில் தான் சரி பார்க்க முடிகிறது.

அதன்படி தமிழ்நாடு அரசு மின்துறை பணியாளர்கள் அனைவரும் இரவு 9 மணியில் இருந்து காலை 2 மணி வரை அலுவலகத்தில் தான் இருக்க வேண்டும் என்றும் இதனால் காலையில் சற்று தாமதமாக கூட பணிக்கு வராலாம்  என்றும்  அலுவலக பொறியாளர்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.