Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு போட்ட பிளான்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

Tamil Nadu government plans to celebrate Pongal!! Happy people!!

Tamil Nadu government plans to celebrate Pongal!! Happy people!!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு 8 பிரிவுகளின் கீழ் போட்டிகளை வகுத்துள்ளது. இந்த போட்டிகள் உழவர்களையும், உழவுத் திருநாளையும் சிறப்பிக்கும் விதமாக அமையும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளின் வகைகள் :-

✓ கோலப்போட்டி

✓ ஓவியப்போட்டி

✓ புகைப்படப் போட்டி

✓ ரீல்ஸ் போட்டி

✓ பாரம்பரிய உடைப் போட்டி

✓ மண்பானை அலங்கரித்தல் போட்டி

✓ சுயமிப் போட்டி

✓ ஆவணப்படங்கள்

போன்ற போட்டிகளில் மாணவ மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஜாதி மத வேறுபாடு இன்றி கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா கொண்டாடப்படுவது ஜாதி மத வேறுபாடு இன்றி உழவர்களின் உடைய உன்னதமான வேலையை போற்றவும் இவை ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளுக்கான விவரங்கள் :-

✓ கோலப் போட்டிகள்

கருப்பொருள் :- பொங்கல் பண்டிகை மற்றும் தமிழர் மரபுகளைக் காட்சிப்படுத்தும் கோலங்கள்.
வயது :- அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.

✓ ஓவியப் போட்டிகள்

கருப்பொருள் :- உழவர் பொங்கல் திருநாள் பற்றிய ஓவியங்கள் வகைகள். இதில் பெயிண்டிங், பென்சில், ஸ்கெட்ச், க்ரேயன்ஸ் போன்றவற்றை பயன்படுத்த அனுமதி.
வயது :- அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.

✓ புகைப்படப் போட்டி

கருப்பொருள் :- ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகள் பற்றிய காட்சிகள், பாரம்பரிய உடைகள், பொங்கல் நாட்களின் போது நடக்கும் நிகழ்வுகள், கால்நடைகள் அலங்காரம் போன்றவற்றைப் புகைப்படமாக எடுத்து அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வயது :- அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.

✓ ரீல்ஸ் போட்டி

கருப்பொருள் :- நாட்டுப்புறக் கதைகள் , நாட்டுப்புறப் பாடல்கள் , சிலம்பாட்டம் , கரகாட்டம் , ஏறுதழுவுதல் , ஜல்லிக்கட்டு காளை மாடுகளைத் தயார்படுத்துதல்.
வயது :- அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.
குறிப்பு :- வீடியோ ஒரு நிமிடத்திற்குள் இருத்தல் அவசியம்.

✓ பாரம்பரிய உடைப் போட்டிகள்

கருப்பொருள் :- பாரம்பரியம் சம்பந்தப்பட்ட உடைகள்.
வயது :- 1 வயது முதல் 13 வயது வரை மட்டுமே.

✓ மண்பானை அலங்கரித்தல் போட்டி:

வயது :- வயது வரம்பு இல்லை. விருப்பமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

✓ சுயமிப் ( செல்ஃபி ) போட்டிகள்

கருப்பொருள் :- பொங்கல் பானையுடன் ஒரு செஃல்பி , ஜல்லிக்கட்டு காளையுடன் ஒரு செஃல்பி , பொங்கல் நிகழ்ச்சிகள் உடன் செஃல்பி எடுத்து அனுப்பவும்.
வயது :- அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.

✓ ஆவணப்படம்

கருப்பொருள் :- தமிழ்நாடு பொங்கல் பண்டிகையை எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடுகிறது, ஜல்லிக்கட்டு, விளையாட்டு , ஜல்லிக்கட்டு காளை குறித்த பதிவுகள்.
வயது :- அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.

குறிப்பு :-

இந்த போட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகள் வேறு ஒருவருடையதாக இருத்தல் கூடாது. உங்களுடைய சொந்த படைப்பாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்பும் போட்டியாளர்கள் உங்களுடைய படைப்புகளை ஜனவரி 20-க்குள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும் படி தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version