Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உதவித்தொகை பெரும் வங்கி கணக்கு குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!!

Tamil Nadu Government Released New Update Regarding Scholarship Major Bank Account!!

Tamil Nadu Government Released New Update Regarding Scholarship Major Bank Account!!

 

 

உதவித்தொகை பெரும் வங்கி கணக்கு குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் கூடங்களில் படிக்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தும் திட்டம் சிறப்பு வாய்ந்தது.

அதாவது குடும்ப வறுமையின் காரணமாக பல மாணவர்கள் சரியாக கல்வி பெற முடியாமல்,படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு,பெற்றோர்க்களுக்காக தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்று வந்தனர்.இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு அரசு மாணவர்களை ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு நிதி உதவியை வழங்கி வருகிறது.

அதன்படி அரசு,அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிப்புக்கும் மாணவ,மாணவிகளுக்கு அவர்களது பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு,பணம் இருப்பு வைக்கப்படுகிறது.மேலும் வங்கி கணக்கு தொடங்குவது இரண்டு முறைகளில் செயல்படுத்தப்படுகிறது.1-5 பயிலும் மாணவர்கள் மற்றும் 6-12 வரை படிக்கும் மாணவர்கள் என தனித் தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 10 வயதுக்குள் இருபவர்களுக்கு அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும்.அதற்க்கு அவர்களின் ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை மற்றும் பெற்றோரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை கொடுக்க வேண்டும். 10 வயது மேல் இருக்கும்( 6-12-ம் வகுப்பு)இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு ஆரம்பிக்க அவர்களின் ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் ஆகியவை தேவைப்படும்

இதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்ட அஞ்சலகங்களிலும் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என்று தெரிவிக்கப்படுள்ளது.மேலும் இந்த வங்கி கணக்கு தொடங்க எந்த வித முன்பணமும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version