தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சாதனை!! ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு!!

Photo of author

By Gayathri

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொழிலாளர்களின் சேவையை அங்கீகரித்து, உற்பத்தி திறன் மற்றும் தொழில் அமைதியை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

பணிபுரிந்த நாட்களை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது.
200 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு ரூ.625,
151 முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.195,
91 முதல் 151 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85,
90 நாட்கள் அல்லது அதற்கு குறைவாக பணிபுரிந்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது.

இந்த உத்தரவு, ஊழியர்களின் சேவையை மதித்து ஊக்குவிக்கும் முயற்சியாகவும், தொழில்நிலையை மேம்படுத்துவதன் மூலம் தொழில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியாகவும் செயல்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் கடைசி நாளில் பணியில் இருந்தவர்களே இதற்குத் தகுதியுடையவர்கள். மேலும், ஒழுங்கு நடவடிக்கைச் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள ஊழியர்கள் இந்த தொகையைப் பெற தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படுவதால், பணியாளர்கள் தங்கள் வேலையை மேலும் சிறப்பாகச் செய்யவும், அதிக உழைப்புடன் செயல்படவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது போக்குவரத்து கழகத்தின் நம்பகத்தன்மையையும் சேவையின் தரத்தையும் உயர்த்தும். இதன் மூலம் தொழிலாளர்களின் சேவை தகுதியும், சேவையின் தரமும் மேம்படுவதுடன், தொழில்நிலையும் செயல்திறனும் உயர்வதற்கு வழிவகுக்கும்.

Exit mobile version