மாணவர்களை பலவீனப்படுத்தும் தமிழக அரசு! அண்ணாமலை காட்டம்!

0
175

மக்களை திசை திருப்புவது, தாசீனப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது தான் திமுக அமைச்சர்கள் செய்யும் ஒரே பணி என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது சென்ற வருடம் 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் இந்த வருடம் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 1.32 லட்சமாக அதிகரித்திருக்கிறது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மிகவும் சுலபமாக எதிர்கொள்ள தொடங்கி விட்டதற்கு இதுவே ஒரு சான்று. தேர்வு எழுதிய மாணவர்களில். 67,877 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்ற ஆண்டு தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெற்றவர்களை விட இந்த வருடம் 10,572 மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழ் மொழியில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 19,868ல் இருந்து 31,965 என அதிகரித்திருக்கிறது.

அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் நீட் தேர்வை எழுதியுள்ளார்கள் கிராமப்புற ஏழை மாணவர்கள் வேறு வழியின்றி நீட் தேர்வு எழுதி வருகிறார் என்பதை போன்ற உண்மைக்கு புறம்பான தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது மாணவர்களை சிறுமைப்படுத்துவதை போன்ற செயலாகும்.

மக்களை திசை திருப்புவதும், உதாசீனப்படுத்துவதும், சிறுமைப்படுத்துவதும், தான் திமுக அமைச்சர்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல் மறக்காமல் செய்து வரும் ஒரே வேலை என கூறியிருக்கிறார் அண்ணாமலை.

மருத்துவ படிப்புக்கும் உழைப்பு தேர்வு இல்லாத பத்து வருடங்களில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 31 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தார்கள்.

இவர்களில் கிராமப்புறமானவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதை தெரிந்து கொண்டு தான் அமைச்சர் இதனை பேசி வருகிறார் இது மலிவான அரசியல் என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.

இந்த வருடம் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணம் திமுகவின் சுயலாப சிந்தனைகளும், இயலாமையின் மறு உருவமாக திகழும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமே ஆவர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இ பாக்ஸ் என்று சொல்லப்படும் பயிற்சி முறையை திமுக ஏன் கைவிட்டது என்பதை பொது மக்களுக்கு விளக்க வேண்டும் என கூறியிருக்கிறார் அண்ணாமலை.

அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவது திமுக அமைச்சர்களின் கண்களை உறுத்துகிறது எனக் கூறியிருக்கிறார்.

மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக விளையாட துணிந்திருக்கும் திமுக வெட்கி தலைகுனிய வேண்டும். ஊழலில் கொழிக்க நீட் தேர்வை திமுக அரசு எதிர்த்து வருகிறது

தொடர்ச்சியாக மாணவர்களை பலவீனப்படுத்தி வருவதை திமுக அரசு இனிவரும் காலங்களிலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

தேர்ச்சி விகிதத்தை தமிழகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆந்திரா, கேரளா, குஜராத், கர்நாடகா, போன்ற மாநில மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அந்த மாநில அரசு எடுத்து வரும் முயற்சிகளை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.