பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 வழங்கும் தமிழக அரசு.!! விண்ணப்பம் செய்வது எப்படி?
தமிழகத்தில் பெண்களின் கல்வி மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதில் ஒன்று தான் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்.பெண் குழந்தைகளின் நலனிற்காக கடந்த 1992 ஆம் ஆண்டு தமிழக அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.பெண் சிசுக்கொலைகளை தடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இன்று பெரிய துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர்.நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.பெண்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் கிராம புறங்களில் இன்றும் பெண் சிசுக்கொலை தொடர்கதையாகி வருகிறது.
அதேபோல் பெண் பிள்ளைகளின் உயர்கல்வி கனவுகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக குழந்தை திருமணம் நடப்பதும் அரங்கேறி வருகிறது.இந்நிலையில் பெண் சிசுக்கொலை,குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகள் மேற்படிப்பு தொடர மாதந்தோறும் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டு வருகிறது.அதேபோல் வீட்டில் ஒரு பெண் குழந்தை மட்டும் பிறந்திருந்தால் அக்குழந்தைக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது.
மேலும் ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டும் பிறந்திருந்தால் ஒருவருக்கு ரூ.25,000 என்று இரண்டு குழந்தைகளுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது.அரசு இந்த தொகையை பெண் குழந்தைகளின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து வைப்புத் தொகை ரசீதை சம்மந்தப்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்குகிறது.பெண்கள் குழந்தைக்கு 18 வயது நிரம்பிய பின்னர் முதிர்வு தொகை வழங்கப்படும்.
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கான தகுதி
1)குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க இருக்க வேண்டும்.
2)பெண் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.இதற்கான வயது உச்ச வரம்பு 40 ஆகும்.