Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேலை இல்லாதவர்களுக்கு ரூ.7200 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு!! விண்ணப்பம் செய்வது குறித்த முழு விவரம் உள்ளே!!

Tamil Nadu government will provide Rs.7200 stipend to unemployed people!! Complete details on how to apply inside!!

Tamil Nadu government will provide Rs.7200 stipend to unemployed people!! Complete details on how to apply inside!!

இன்றைய காலத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம்.குறிப்பாக பொறியியல் படிப்பு முடித்த பல இளைஞர்கள் உரிய வேலை வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் நலனிற்காக தமிழக அரசு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக புதுபித்தவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேலான கல்வி படிப்பு முடித்தவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர்.

செப்டம்பர் 30,2024 அன்றைய தேதியில் இருந்து ஐந்தாண்டுகள் நிறைவுற்று வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கிவருகிறது.

தகுதி:

1)விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72.000க்கு கீழ் இருக்க வேண்டும்.

2)பழங்குடியின விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இதர வகுப்பை சேர்ந்த விண்ணப்பதாரர் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித் தொகை விவரம்:

பத்தாம் வகுப்பில் தோல்வி – மாதம் ரூ.200/-

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி – மாதம் ரூ.300/-

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி – மாதம் ரூ.400/-

பட்டப்படிப்பு தேர்ச்சி – மாதம் ரூ.600/-

மாற்றுத் திறனானிகளுக்கான ஊக்கத் தொகை விவரம்:

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி – மாதம் ரூ.600/-

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி – மாதம் ரூ.750/-

பட்டப்படிப்பு தேர்ச்சி – மாதம் ரூ.1000/-

மேலும் கூடுதல் விவரங்கள் பெற https://tnvelaivaaippu.gov.in இணையதள பக்கத்தை அணுக வேண்டும்.இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வருகின்ற 31 ஆம் தேதி இறுதி நாள் ஆகும்.

Exit mobile version