பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழக அரசன் அது சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடத்தி வரக்கூடிய சுய உதவிக் குழுக்களுக்கு சிறு கடன் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
சிறுபான்மையின ஆண்கள் அல்லது பெண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து அவற்றின் மூலம் தங்களுடைய குடும்ப வருமானத்தை மேம்படுத்தும் விதமாக சிறு தொழில் செய்வதற்கு உதவியாக இந்த சிறு கடனானது வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் :-
இத்திட்டத்தின் கீழ் பயன்பட நினைப்பவர்கள் சிறுபான்மை சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். குறைந்தது ஆறு மாதம் சேமித்தல் மற்றும் கடனை திருப்பி செலுத்துதல் போன்ற பணிகளில் நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் கட்டாயமாக 60% சிறுபான்மையினராக இருத்தல் அவசியம் எஞ்சியுள்ள 40% ஒவ்வொரு குழுவிலும் கட்டாயமாக 60% சிறுபான்மையினராக இருத்தல் அவசியம் எனவும் மீதமுள்ள 40 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் என பிற வகுப்புகளை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 20 முதல் 10 உறுப்பினர்கள் இருத்தல் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் ஆவணங்கள் :-
✓ ஜாதி சான்றிதழ் (அ) பள்ளி மாற்ற சான்றிதழ்
✓ வருமானச் சான்றிதழ்
✓ இருப்பிடச் சான்றிதழ்
✓ ஆதார் அட்டை
திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை :-
இத்திட்டத்தின் கீழ் பயன்பட நினைப்பவர்கள் அந்தந்த மாவட்டத்தின் உடைய பிற்படுத்தப்பட்டோர் அல்லது சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி போன்ற இடங்களில் விண்ணப்பங்களை பெற்று மேலே கொடுக்கப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.