Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆன்லைன் விளையாட்டிற்கு தமிழக அரசின் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்

#image_title

ஆன்லைன் விளையாட்டிற்கு தமிழக அரசின் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அடிமையாக உள்ளனர். லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். தொடர்ந்து இது போல் தற்கொலைகள் நடைபெறுவதால் இதை தடை செய்ய வேண்டும் என மக்கள் , சமூக ஆர்வலர்கள் போன்றோர் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. பின்னர் சட்ட சபையில் அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து, அதை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. அந்த மசோதா மீது சில விளக்கங்கள் கேட்டு அரசுக்கு அனுப்பி வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி.

அந்த சட்ட மசோதாவை சட்டசபையில்  மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சில நாட்கள் கிடப்பில் வைக்கப்பட்டு பின்னர் அந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். உடனடியாக மசோதாவை சட்டமாக்கி அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. தற்போது அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.

21 ம் தேதி வெளியிட்ட தமிழக அரசிதழில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி தெரிவித்திருப்பதாவது .

இது தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் மற்றும் ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் விதிகள் 2023. வரும் 21ம் தேதி முதல் இந்த விதிமுறைகள் அமுலுக்கு வரும். தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை சட்டம் 2022 க்கான சட்ட விதியாக ஏற்கப்படவேண்டும்.

ஆன்லைன் விளையாட்டுகளை அளிக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் நிறுவனங்கள் தங்களின் பெயரை ஒரு மாதத்திற்குள் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் செயலாளரிடம் ஒரு லட்சம் செலுத்தி பெயர் பதிவு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை பெறலாம்.

அந்த நிறுவனத்தின் பெயரை பதிவு செய்வதையோ அல்லது விண்ணப்பத்தை நிராகரிப்பதோ , விண்ணப்பத்தை கொடுத்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிராகரிப்பதற்கு முன் விண்ணப்பதாரருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

தவறான தகவல்கள் கொடுத்து சான்றிதழ் பெறப்பட்டால் அதற்கான விளக்க நோட்டிசை ஆணையம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசு நியமிக்கும். அவர்கள் 5 ஆண்டுகளோ அல்லது 70 வயது வரையிலோ, இதில் எது முதலாவதாகவோ அது வரை பணியில் நீடிப்பார்.

Exit mobile version