கௌதம் அதானி சென்னையில் யாரை சந்தித்தார்? தமிழக அரசு அதிரடி பதில்!!  

0
124
Tamil Nadu government's response to the question raised by the Arapor movement, "Who did Gautam Adani meet in Chennai?"

Tamil Nadu Govt: “சென்னையில் கௌதம் அதானி யாரை சந்தித்தார்” என்று அறப்போர் இயக்கத்தால் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக அரசு பதில்.

கடந்த சில மாதங்களுக்கு முன் 25000 கோடி ஊழல் செய்து இருப்பதாக அதானி நிறுவனமான  எனர்ஜி சொலுசன்ஸ் லிமிடெட்  மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம்  (சோலார் பேனல்) வழங்க 20 நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்து இருக்கிறது  அதானி நிறுவனம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதானி நிறுவனத்துடன்  தமிழக மின் வாரியத்திற்கு தொடர்பு இருக்கிறது என தகவல் வெளியானது. மேலும், கடந்த ஜூலை மாதம் கௌதம் அதானி சென்னை வந்த போது  முதல்வர் ஸ்டாலினை இருந்தார். அதற்கான காரணம் என்ன? என எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தார்கள். குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் கேட்டு அறிக்கை  வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வட்டாரத்தில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தியாவில் பிற மாநிலங்களை போல ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் மட்டுமே தமிழக மின் வாரியம் ஒப்பந்தம் செய்து இருக்கிறோம் என கூறினார்.

மேலும், கௌதம் அதானி சென்னையில் யாரை சந்தித்தார்? என்ற கேள்வியை முன் வைத்து அறப்போர் இயக்கம் தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்து. அதற்கு தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் பதில் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், அதானி சென்னை வந்த போது எந்த ஒரு அரசியல் தலைவரையும் , அரசு ஊழியரையும் சந்திக் வில்லை என பதில் கூறப்பட்டு இருக்கிறது.